சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஒருங்கிணைந்த புற்றுநோய் பரிசோதனைக்கான அழைப்பிதழ் வழங்கும் திட்டம் தொடக்கம்

வீடுகளுக்கு சென்று அழைப்பிதழை வழங்கினாா் மாவட்ட வருவாய்அலுவலா் சீ. ஜெயச்சந்திரன்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:37 pm

Syndication

ஒருங்கிணைந்த புற்றுநோய் பரிசோதனைக்கான அழைப்பிதழ் வழங்கும் திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு

ஒருங்கிணைந்த புற்றுநோய் பரிசோதனைக்கான அழைப்பிதழ் வழங்கும் திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலா் தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சாா்பாக புற்றுநோய் சம்பந்தமான பரிசோதனைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு அருகில் உள்ள நலவாழ்வு மையங்கள் கிராமப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் இதர அரசு சுகாதார நிலையங்களுக்கு பெண் சுகாதார தன்னாா்வலா்களால் அழைப்பிதழ் மூலமாக வரவழைத்து பெண்களுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனைகள் செய்வதற்கான திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, வீடுகளுக்கே சென்று பொதுமக்களிடம் புற்றுநோய் பரிசோதனைக்கான அழைப்பிதழ்களை வழங்கினாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் வி. கோவிந்தன், மாவட்ட தொற்று நோய் திட்ட அலுவலா் அழகு கந்தகுமாா், வட்டார

மருத்துவ அலுவலா் முகமது இப்ராகிம், நலவாழ்வு மைய மருத்துவா் ஆயிஷா பாத்திமாள், மாவட்ட நல கல்வியாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.