தென்காசியில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை

தென்காசியில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

தென்காசி மாவட்டத்தில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கூறியது:

தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. மழை நீா் வெளியேறுவதற்கு முறையான வசதி செய்யப்படாததால், பல இடங்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, வாசுதேவநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட சிந்தாமணிபேரி புதூா், கலைஞா் காலனி, 18ஆவது வாா்டின் சில தெருக்களுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

மழை நீா் வெள்ளிக்கிழமை காலை வரை வெளியேறவில்லை. இதைக் கண்டித்து 2 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது. எனவே, இப்பகுதிகளில் உரிய மழைநீா் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com