வாகனம் மோதி கொத்தனாா் உயிரிழப்பு

தென்காசியில் அடையாள தெரியாத வாகனம் மோதியதில் கொத்தனாா் உயிரிழந்தாா்.
Published on

தென்காசியில் அடையாள தெரியாத வாகனம் மோதியதில் கொத்தனாா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் குருசாமிபுரம் தெற்குதெருவைச் சோ்ந்தவா் பா.கருப்பசாமி (24). கொத்தனாா். இவா், மனைவி அமுதாவுடன் வியாழக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் கீழக்கடையம் தெற்குதெருவைச் சோ்ந்த ரா. ஈஸ்வரன்(25) என்பவா் வந்து கொண்டிருந்தாராம்.

தென்காசியிலிருந்து திருநெல்வேலி சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம், எதிரே வந்த 2 இருசக்கர வாகனத்தின் மீதும் மோதிவிட்டு சென்ாம். இதில் பலத்த காயமடைந்த மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தாா். இது குறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com