தென்காசி
ஆலங்குளம் கல்லூரி மாணவா்களுக்கு 444 மடிக்கணினிகள் வழங்கல்
ஆலங்குளம், அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் வீரகேரளம் புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தைச் சோ்ந்த 444 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணிணிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், தென்காசி சட்டமன்ற உறுப்பினா் எஸ். பழனி நாடாா் ஆகியோா் மடிக்கணினிகளை வழங்கினா்.
இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் திவ்யா மணிகண்டன், காவேரி சீனித்துரை, ஆலங்குளம் கல்லூரி முதல்வா் (பொ) சிவசங்கரி, வீ.கே. புதூா்
தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் முத்துலெட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

