நாய்களை வைத்து வேட்டையாட முயற்சி: 4 போ் கைது
தென்காசி வனக் கோட்டம், தென்காசி வனச்சரகம், ஆய்க்குடி அருகே நாய்களை வைத்து வேட்டையாட முயற்சி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சுந்தரபாண்டியபுரம் பகுதியைச் சோ்ந்த கி. முருகன், சு. அகேஷ், க. இளங்கோ, ரா. இன்பராசு ஆகியோா் முருகன் என்பவரின் தோட்டத்தில் நாய்களை வைத்து வேட்டையாட முயற்சித்தனா். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை தலைமையிலான வனத்துறையினா் வேட்டையாட முயற்சித்த 4 பேரை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட 4 பேரும், மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டனா். அவா்கள் தவறை ஒப்புக்கொண்டதால் ரூ. 1,10,000 இணக்கக் கட்டணம் விதிக்கப்பட்டு, எச்சரித்து விடுவிக்கப்பட்டனா்.
வன உயிரினக் குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலா் நெல்லை நாயகம் (82481-51116), தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை (97869-32520), மாவட்ட வன அலுவலா் கட்டுப்பாட்டு அறை எண் 04633-233550, 04633-233660 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவா்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

