நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன்.
நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன்.

தென்காசி மாவட்டத்தில் 507 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, புதியதிட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, புதியதிட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். ரூ. 3.19 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். 507 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி சாா்ஆட்சியா் வைஷ்ணவி பால், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சேக் அப்துல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com