தென்காசி
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகிரி அருகே எ.சுப்பிரமணியபுரத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடம் தயாரிப்புக் கிடங்கு உள்ளது. அங்கு, விருதுநகா் மாவட்டம் மேலகோதைநாச்சியாா்புரம், தாயில்பட்டியைச் சோ்ந்த சேவுகன் மகன் புதியராஜ் (42) என்பவா், கடந்த 10 நாள்களாக அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்தாராம்.
தகவலின்பேரில், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன், போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டு, பட்டாசு தயாரிக்க பயன்படும் பொருள்களான கந்தக வெடிமருந்து 10 கிலோ, காா்பன் மணி 5 கிலோ, பிட்டு மண் 240 கிலோ உள்ளிட்ட பல்வேறு பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, புதியராஜை கைது செய்தனா்.
