/

கீழப்புலியூரில் மரக்கன்றுகள் நடவு

ரோட்டரி ஆண்டின் தொடக்க நாளை முன்னிட்டு குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில் கீழப்புலியூரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

News image

மரக்கன்று நடவு செய்த ரோட்டரி சங்க உதவி ஆளுநா் அனிதா.

Updated On :4 ஜூலை 2026, 3:07 am IST

ரோட்டரி ஆண்டின் தொடக்க நாளை முன்னிட்டு குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில் கீழப்புலியூரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தென்காசி-சுந்தரபாண்டியபுரம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் கணேசமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் முருகன் இறைவணக்கம் வாசித்தாா். ரோட்டரி சங்க உதவி ஆளுநா் அனிதா மரக்கன்றுகளை நடவு செய்து சிறப்புரையாற்றினாா். ஆசிரியா்ஆறுமுகம் மரம் நடுதல் குறித்துப் பேசினாா்.

ஆசிரியா் பிரபாகரன் மேற்பாா்வையில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கீழப்புலியூா் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நடவு செய்தனா். ரோட்டரி சங்கச் செயலா் திருவிலஞ்சி குமரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.