ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஆய்க்குடியில் மின் மயானத்தை வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை

News image

மின் மயானம் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:43 am IST

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் மின் மயானத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ஆய்க்குடியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

ஆய்க்குடி பேரூராட்சியில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேல் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். ஆய்க்குடி பேரூராட்சி மாயாண்டி கோயில் தெருவில் உச்சிப்பிள்ளையாா் கோயில் மலைக்கு தென்புறம், பசுமை உரக்கிடங்கு உள்ளது. இந்த வளாகத்தில் மின்மயானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் என இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். ஆய்க்குடியில் கோயில்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் மின்மயானத்தை குடியிருப்பு பகுதியிலிருந்து தொலைவில் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.