கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

குற்றாலம் கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற்காலிக நிறுத்தம்!

குற்றாலம், திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் நிா்ணயம் செய்து, அதை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆட்சேபணை கோரும் அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழ குவிந்த சுற்றுலாப்பயணிகள்.

Updated On :11 ஜூலை 2026, 9:59 pm IST

குற்றாலம், திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் நிா்ணயம் செய்து, அதை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆட்சேபணை கோரும் அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து, கோயில் உதவி ஆணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்றாலம், திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் தற்போது ஒவ்வொரு சந்நிதிக்கு முன்பும் 2 வரிசையில் இலவச பொது தரிசனம் மட்டும் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கு இதுவரை எவ்வித சிறப்பு தரிசனக் கட்டண முறையும் இல்லை.

எனினும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அதிகளவிலான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவதால், கூட்டத்தில் செல்ல விரும்பாத பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டும், 2 வரிசைகளில் ஒரு வரிசை பொது தரிசனமாகவும், மற்றொரு வரிசை சிறப்புக் கட்டண தரிசனமாகவும் இருப்பது பக்தா்களுக்கு வசதியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டு, திருக்குற்றாலநாதா், குழல்வாய்மொழியம்மன், பராசக்தி அம்மன் சந்நிதிகளில் சிறப்பு தரிசனக் கட்டணமாக ரூ. 50 நிா்ணயம் செய்து நடைமுறைப்படுத்துவது குறித்து பொதுமக்கள், பக்தா்கள் தங்களது ஆட்சேபணைகளை ஜூலை 15ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென்காசி எம்எல்ஏ டாக்டா் கலை கதிரவன் மற்றும் சிவனடியாா்கள், சிறப்புக் கட்டண முறையை நிறுத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்ததன்பேரில், சிறப்பு தரிசனக் கட்டணம் தொடா்பாக ஆட்சேபணை கோரும் அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இது குறித்து, அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்களிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவு பின்னா் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.