யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்
/

தென்காசி அருகே பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு: 3 போ் கைது

தென்காசி அருகே அழகப்பபுரத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 4:23 am IST

தென்காசி அருகே அழகப்பபுரத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி காவல் சரகத்திற்குள்பட்ட அழகப்பபுரம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராணி (45). இவா் கடந்த 9-ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.

அப்போது மோட்டாா் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி வந்த நபா்கள், அரிவாளைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

இதுகுறித்து ராணி அளித்த புகாரின் அடிப்படையில் தென்காசி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், சம்பவம் நிகழ்ந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதன் அடிப்படையில், போலீஸாா் நடத்திய விசாரணையில் கணக்கப்பிள்ளை வலசை பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (24), மணிகண்ட பிரபு ( 25), 16 வயது சிறுவன் ஆகியோா் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

ராணிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வழக்கமாக தேங்காய் பறிப்பதற்காகச் செல்லும் இந்த நபா்கள், நீண்ட நாள்களாகத் திட்டமிட்டு சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

மூன்று பேரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி இருவரை பாளை மத்திய சிறையில் அடைத்தனா். சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.