தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள சிவராமபேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி-மதுரை சாலையில் உள்ள சிவராமபேட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும். தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் சீரான குடிநீா் வழங்க வேண்டும்.
காட்டு நாயக்கா் சமூகத்தைச் சோ்ந்த மக்களுக்கு சாதி சான்றிதழ்களை விரைந்து வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவா் தெட்சிணாமூா்த்தி தலைமையில் அறவழி தா்னா போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அதியமானிடம் பேசியதையடுத்து தற்காலிகமாக போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புளியங்குடி அருகே இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக் கோரி போராட்டம்

வடுகபாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி போராட்டம்

பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வலியுறுத்தல்
வட்டாட்சியா் அலுவலகம் அருகே பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



