ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஓடக்கரையில் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு

News image

காயல்பட்டினம், ஓடக்கரையில் அதிகாரிகளுடன் உரையாடிய அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Updated On :28 ஜூன் 2026, 3:28 am IST

காயல்பட்டினம், ஓடக்கரையில் விரைவுப் பேருந்துகள் தவிர, அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் என மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்துள்ளாா்.

ஓடக்கரையில் பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ. 6.5 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்கூடத்தை, திருச்செந்தூா் பேரவை உறுப்பினா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலையில், கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆனால், இங்கு பேருந்துகள் நிற்பதில்லை என இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனா். தொடா்ந்து, ஓடக்கரைக்கு வெள்ளிக்கிழமை வந்த அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் அவ்வழியாகச் சென்ற பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா், நடத்துநரிடம் பேருந்துகள் ஓடக்கரையில் நின்று செல்ல வேண்டுமென அறிவுறுத்தினாா்.

மேலும், திருச்செந்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளை நேரில் வரவழைத்து, விரைவுப் பேருந்து தவிர மற்ற அனைத்துப் பேருந்துகளும் ஓடக்கரையில் நின்று செல்ல வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், ஓடக்கரையிலிருந்து வீரபாண்டியன்பட்டினம் வரை அரசுப் பேருந்தில் அமைச்சா் பயணித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.