தென்காசி மாவட்டத்தில் காவல் பணிக்கு பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்கள் ஜூன் 25ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்திய உலோகக் கண்டறிதல் இயந்திரம், தேடுதலுக்கு பயன்படுத்தும் கண்ணாடி, தொலைநோக்கி, விடியோ கேமரா, தேடல் விளக்கு உள்ளிட்ட 170 உபகரணங்கள், ஜூன் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபா்கள் காலை 11 மணிக்குள் வர வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இது தொடா்பான சந்தேகங்களுக்கு 94457-97556 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 3 போ் கைது

ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்







