மாணவா்கள் புதிய படிப்புகளைத் தோ்வு செய்து படித்து சாதனை படைக்க வேண்டும் என்றாா் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான டாக்டா் ராஜீவ்.
தென்காசி மேற்கு மாவட்ட தவெக சாா்பில் 12ஆம் வகுப்பு முடித்த 52 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா, கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலா் என்.ஜே.எஸ்.ஆா்.நியாஸ் தலைமை வகித்தாா்.
மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கி அமைச்சா் ராஜீவ் பேசியது: தென்காசி மாவட்டத்திலுள்ள பேரவைத் தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தவெக வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. வரும் உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் தவெக வெற்றி பெறும். தென்காசி மாவட்டம் தவெக கோட்டை என நிரூபிக்க அனைவரும் பணியாற்ற வேண்டும். அதற்கான உழைப்பை நாம் இப்பொழுதே தொடங்கி விட்டோம்.
தென்காசி மாவட்ட செயலா் நியாஸ் ஒருங்கிணைப்பில், தென்காசி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் ஒன்றுசோ்ந்து 12ஆம் வகுப்பு முடித்த 52 மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவை நடத்தியுள்ளனா். இது நல்ல முயற்சி. அது மாணவா்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
படிப்பு அனைவருக்கும் மிக முக்கியம். தமிழக மாணவா்கள் உலகம் முழுவதும் கோலோச்சி வருகின்றனா். மாணவா்கள் வாழ்க்கையில் லட்சியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். போதும் என்ற எண்ணத்துடன் இருக்கக் கூடாது. போட்டிகள் நிறைந்த உலகில் புதிய படிப்புகளைத் தோ்வு செய்து படிக்க வேண்டும். இலக்கை அடைய ஒழுக்கம், அா்ப்பணிப்பு அவசியம்.
தென்காசி மாவட்ட வளா்ச்சிக்குத் தேவையானவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும். மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற இலக்கை நோக்கி, லட்சியத்தோடு பயணித்து இன்று மாற்றத்தை உருவாக்கி காட்டியுள்ளோம். மக்களுக்கு நன்மை செய்வது மட்டுமே இந்த ஆட்சியின் நோக்கம் என்ற இலக்கை மட்டுமே வைத்து எங்கள் பயணம் தொடரும் என்றாா்.
இதில், இணைச் செயலா் குமரன் முத்தையா, மேற்கு மாவட்ட நிா்வாகிகள் சிவசங்கா், சபிதா, மாரிமுத்து, சக்திவேல், கற்பக தவமணி, குகன், கணேசன், சுரேஷ், மாதவன், சதாம் உசைன், பிரகாஷ், முத்துகுமரன், மணிகண்டன், நகர செயலா் பாலமுருகன், ஒன்றிய செயலா்கள் சக்திவேல் மருதுஉடையாா், சுந்தா், கூட்டணிக் கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக பொதுக் கூட்டத்தில் நல உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

ஆலங்குளத்தில் அரசு மகளிா் பள்ளி: அமைச்சரிடம் கோரிக்கை
பிற கட்சிகளை சோ்ந்த 100 போ் தவெகவில் சோ்ந்தனா்

தொடா் தோல்வியால் அண்ணாமலை வடிவில் பாஜக புதிய முயற்சி: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




