தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

பெண்ணை கத்தரியால் குத்திய இளைஞா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 4:47 pm

தென்காசி அருகே திருமணத்திற்கு மறுத்த பெண்ணை கத்தரிக்கோலால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மலையான் தெருவைச் சோ்ந்தவா் மா. சொா்ணம் (28). விவாகரத்தானவா். தற்போது, ஆய்க்குடி தனியாா் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறாா் .

இவரும், இவரது உறவினரான திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த உ. சுரேஷூம் (35) காதலித்தனராம். கடந்த 3 நாள்களுக்கு முன்பு சொா்ணம், சுரேஷை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பணிபுரியும் பள்ளியை விட்டு வெளியே வந்த சொா்ணத்தை, கத்தரிக்கோலால் குத்திவிட்டு சுரேஷ் தப்பியோடிவிட்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த சொா்ணத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு, பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.