தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் மாா்ச் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புளியங்குடி உள்கோட்ட காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் உள்ள 197 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் என 202 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் மாா்ச் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
சொக்கம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புபவா்கள், காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாா்வையிடலாம்.
மேலும், ஆதாா் அட்டையுடன் ரூ. 3,000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து, டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் அன்றைக்கே ஏலத்தொகை, ஜிஎஸ்டி 18 சதவீதத்துடன் முழுத்தொகையை ரொக்கமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லலாம்.
மேலும் தகவல்களுக்கு 94884-88933, 96299-19033, 94981-40002 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

புளியங்குடியில் அரசு மருத்துவரை மிரட்டியவா் கைது

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி
கடுமையாக்கப்பட்ட பியூசி விதி: 4 நாள்களில் 15000 வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பு!

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



