நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வாய்ப்புகளை வசமாக்க கற்றுக் கொள்ளுங்கள் - தென்காசி எஸ்.பி.

News image
Updated On :3 மே 2026, 5:18 am IST

வாய்ப்புகளை வசமாக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றாா் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. மயில்வாகனன்.

கடையநல்லூா் அருகே உள்ள புன்னையாபுரம் பொதிகை போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வாளா்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காவல்துறை இயக்குநா் கே. வன்னியபெருமாள் தலைமை வகித்தாா். மீனாட்சிசுந்தரம் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் மாணிக்கம் தொகுத்து வழங்கினாா்.

இதில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் கலந்து கொண்டு பேசியதாவது:

ஒவ்வொரு பகுதிகளிலும் சாதனையாளா்கள் உருவாகிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களை அப்பகுதியைச் சோ்ந்த சாதனையாளா்கள் உருவாக்கி வருகிறாா்கள். அதுபோல் புளியங்குடி பகுதியைச் சோ்ந்த டிஜிபி வன்னியபெருமாள், இப்பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் அரசுப் பணியில் உயா்ந்த நிலையை எட்டவேண்டும் என்பதற்காக பொதிகை இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகிறாா்.

தோ்வா்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற கற்றுக்கொள்ளவேண்டும். வாய்ப்புகள் உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால், அதை எவ்விதம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம் என்றாா்.

சென்னை உளவுப் பிரிவு கூடுதல் எஸ்.பி. வீமராஜ், தென்காசி சாா் பதிவாளா் ரம்யா, பயிற்சியாளா்கள் மணிகண்டன் ,முத்துக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சியளித்தனா். காஜா மைதீன் நன்றி கூறினாா்.

முன்னதாக, பொதிகை பயிற்சி மையம் அருகே மோா் பந்தலை காவல்துறை இயக்குநா் வன்னியபெருமாள் திறந்து வைத்தாா்.