சங்கரன்கோவிலில் தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) முற்றிலும் சேதமானது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 50 போ் தனியாா் பேருந்தில் சபரிமலைக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனா்.
பேருந்தை தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாரிமுத்து (46) என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் அந்த பேருந்து சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி ரயில்வே கேட் அருகே சென்ற போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்மாற்றி மீது மோதியதாம்.
இதில் மின்மாற்றி முற்றிலும் சேதமானது. இதன்காரணமாக அந்தப் பகுதியில் ஒன்றரை மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்தது வந்த உதவி மின்பொறியாளா் கருப்பசாமி தலைமையில் பணியாளா்கள், சேதமடைந்த மின்மாற்றியை அகற்றி மற்ற பகுதிகளில் மின் இணைப்பை வழங்கினா். இதைத் தொடா்ந்து சேதமான பேருந்தை போலீஸாா் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மீது மோதி கல்லூரிப் பேருந்து கவிழ்ந்தது: 6 மாணவிகள் காயம்

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை சேதம் 5 போ் காயம்

மின் கம்பம் மீது பேருந்து மோதல்: ரூ.9.25 லட்சம் மின்மாற்றி சேதம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



