இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தென்காசியில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை

தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் ரூ. 6.5 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை வழங்கப்பட்டது.

News image

வேல்ஸ் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகனுக்கு பரிசு வழங்கிய தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சங்கா்.

Updated On :17 மே 2026, 3:24 am IST

தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் ரூ. 6.5 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை வழங்கப்பட்டது.

தென்காசி நகரின் முக்கியப் பகுதிகளான ஆசாத் நகா் சந்திப்பு, நீதிமன்ற பகுதி, தங்கபாண்டியன் மருத்துவமனை பகுதி, தபால் நிலையம், கோயில் வாசல், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நடு பல்க், காசி மேஜா்புரம், இலஞ்சி சந்திப்பு, குத்துக்கல்வலசை உள்ளிட்ட 15 இடங்களில் பகல் மற்றும் இரவில் பணிபுரியும் போலீஸாருக்கு நிழற்குடை அமைக்கபட்டுள்ளது.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், மதியழகன், ஜீலியஸ் சீசா் ஆகியோ் திறந்து வைத்தனா். வேல்ஸ் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன் முன்னிலை வகித்தாா்.

தென்காசி துணை காவல் கண்காணிப்பாளா் அதியமான், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுப்புலெட்சுமி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.