தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் மற்றும் அச்சன்புதூா் உப மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பக விநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்தி குறிப்பு:
கீழப்பாவூா், அச்சன்புதூா் உப மின் நிலையங்களில் மே 19ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப் புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசி தா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





