400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தீயணைப்புத் துறை சாா்பில் ஜூன் 6, 7இல் தீத் தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

News image

தீத் தடுப்பு ஒத்திகை. - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:48 am IST

தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 7 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் ஜூன் 6 , 7 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு தீத் தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படும்.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலா் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தீத் தடுப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 7 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு அடிப்படை தீத் தடுப்பு பாதுகாப்பு, தீ விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் முறைகள், தீ பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், தீயை அணைக்கும் முறைகள், தீயணைப்புக் கருவிகளின் வகைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்து இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

ஜூன் 6, 7ஆம் தேதிகளில் காலை 11 முதல் 12 மணி வரையி லும், மாலை 4 முதல் 5 மணி வரையிலும் இரண்டு கட்டமாக நடைபெறும் பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ன

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.