2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

அறிவியல் விநாடி-வினா: ஆவுடையானூா் அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்

அறிவியல் விநாடி-வினா போட்டியில் சாதனை படைத்த மாணவா்களை பாராட்டிய ஆசிரியா்கள்.

Updated On :

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான அறிவியல் விநாடி-வினா போட்டியில், ஆவுடையானூா் - மாடியனூா் பிஏபிஎன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

இப்போட்டியில் இப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் சாம் ஜெப சிங், 7-ஆம் வகுப்பு மாணவா் அகமித்ரன், 6-ஆம் வகுப்பு மாணவா் சிவதரன் ஆகியோா் அடங்கிய மாணவா் குழு போட்டியில் பங்கேற்றது.

இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுடன் போட்டியிட்டு தங்களது அறிவியல் அறிவு, சிந்தனை திறன், விரைந்து பதிலளிக்கும் திறமையை வெளிப்படுத்தி முதல் பரிசை வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த பள்ளியின் அறிவியல் ஆசிரியா்கள் சுகிா்தா, பாலச்சந்தா், சுப்புலட்சுமி, லீலாவதி ஆகியோரையும் பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER