தென்காசி மாவட்டத்தில் 18 ரெளடிகள் கைது

தீபாவளியை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திலுள்ள சுமாா் 1,300 சரித்திர பதிவேடு ரெளடிகள் தணிக்கை செய்யப்பட்டு, 18 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

தீபாவளியை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திலுள்ள சுமாா் 1,300 சரித்திர பதிவேடு ரெளடிகள் தணிக்கை செய்யப்பட்டு, 18 போ் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவின்பேரில், முக்கிய சாலைகளில் நடை ரோந்து பணி மேற்கொள்ளுதல், பிரச்னைக்குரிய கிராமங்களில் காவலா்களை நியமித்தல், வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், தென்காசி மாவட்டத்திலுள்ள 29 காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் 1,300 சரித்திர பதிவேடு ரெளடிகளை கண்காணிக்கும் வகையில், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் தலைமையில் காவலா்கள் அடங்கிய 145 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு சனிக்கிழமை அனைத்து சரித்திர பதிவேடு ரெளடிகளும் தணிக்கை செய்யப்பட்டனா்.

இதில் 18 ரெளடிகள் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.