பாவூா்சத்திரம் ஆட்டுச் சந்தையில் ஒரு மாத காலத்திற்கு முன்பே களைகட்டிய தீபாவளி விற்பனை
பாவூா்சத்திரம், அக். 8: தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் ஆட்டுச் சந்தையில் ஒரு மாத காலத்திற்கு முன்பே தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.

ஆடுகளை வாங்குவதற்கு குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்.
பாவூா்சத்திரம், அக். 8: தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் ஆட்டுச் சந்தையில் ஒரு மாத காலத்திற்கு முன்பே தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.
நிகழாண்டு நவம்பா் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அப்போது ஆடுகளின் விலை இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதால், ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் முன்கூட்டியே ஆடுகளை வாங்கிச் சென்று வீட்டில் வளா்க்கத் தொடங்கியுள்ளனா். இதனால், வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்ாக வியாபாரிகள் கூறினா்.
மேலும், கல்லூரணி ஊராட்சி சாா்பில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் இங்கு கட்டப்பட்ட சுகாதார வளாகம் இதுவரை திறக்கப்படவில்லை. எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாததால் ஆடு வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளானதாகவும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

