ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ரூ. 1.50 கோடிக்கு விற்பனை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி வாரச் சந்தையில், தீபாவளியை முன்னிட்டு சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி வாரச் சந்தையில், தீபாவளியை முன்னிட்டு சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
இம்மாவட்டத்தில் எட்டயபுரத்துக்கு அடுத்த பெரிய சந்தையான இங்கு, செவ்வாய், சனிக்கிழமைதோறும் ஆடுகள் விற்பனை நடைபெறும். தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்படும்நிலையில், இந்த ஆட்டுச் சந்தை சனிக்கிழமை அதிகாலையிலேயே தொடங்கியது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், சிவகளை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான வியாபாரிகள் இங்கு குவிந்தனா்.
தோராயமாக 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்பனையானது. வெள்ளாடுகள் மட்டுமன்றி கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, வேலி ஆடு, செம்மறி ஆடு என பலவகை ஆடுகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. காலைமுதல் பரவலாக மழை பெய்தது. எனினும், அதைப் பொருள்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் ஆடுகளை வாங்கிச் சென்றனா். மொத்தம் ரூ. 1.50 கோடிக்கு வியாபாரம் நடைபெற்ாக அங்கிருந்தோா் தெரிவித்தனா். ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் அவற்றை வளா்ப்போா் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

