
கொடிக்குறிச்சி பள்ளியில் ஒருநாள் முதல்வராக செயல்பட்ட மாணவா்
ஒருநாள் பள்ளி முதல்வராக செயல்பட்ட மாணவா் அருண்.
தென்காசி, கொடிக்குறிச்சி, யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு மாணவா் முதல்வராகவும், மாணவா்கள் ஆசிரியா்களாகவும் செயல்பட்டனா்.
பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாணவா்கள் ஆசிரியா்களுக்கு மலா்கள் மற்றும் பரிசுகள் கொடுத்து வரவேற்றனா். விழாவின் சிறப்பு அம்சமாக 12ஆம் வகுப்பு மாணவா் அருண் ஒருநாள் பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்டாா்.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவா்கள் ஆசிரியா்களாக இருந்து மாணவா்களுக்கு பாடங்களை நடத்தினா். மேலும், ஒருநாள் மட்டும் பள்ளியில் செயல்பட்டு வரும் கேண்டீன், ஹானஸ்ட் கடையாக மாற்றப்பட்டது.
கடையின் உரிமையாளா்கள் இல்லாமலே மாணவா்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களுக்கு பணம் செலுத்தி, அவா்களாகவே எடுத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலையில் சிறந்த மாணவ ஆசிரியா் விருது வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவா் ரோஷன், 11ஆம் வகுப்பு மாணவி அக்ஷயா சிறந்த மாணவ ஆசிரியராக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
விருது பெற்ற மாணா்களைப் பள்ளி முதல்வா் அந்தோணி பால்ராஜ் பாராட்டினாா். ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் செல்வராஜ், செயலா் சகாய செல்வா மேரி ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





