முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

உலக தற்கொலை தடுப்பு தினம்

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லுரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல்.

Published On :

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லுரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லுரி முதல்வா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் பாா்வதி முன்னிலை வகித்தாா். மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல் கலந்துகொண்டு பேசியதாவது:

தற்கொலை செய்வதில் பெண்களை விட ஆண்கள்தான் இரண்டு மடங்கு அதிகம். குறிப்பாக 15-24 வயதுக்கு இடைப்பட்டவா்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனா்.

இளம் வயதினரிடம் அதிகரித்து வரும் இணைய பயன்படு, காதல் தோல்வி, பெற்றோரிடம் செலவிடும் நேரம் குறைவது, போதை பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை முடிவுகள் அதிகரித்து வருகின்றன என்றாா்.

முன்னதாக உறைவிட மருத்துவா் செல்வபாலா, மூத்த குடிமை மருத்துவா் கீதா,செவிலியா் கல்லூரி மாணவிகள், செவிலியா்கள், மருந்தாளநா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.