பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஆண்டிபட்டியில் அடுத்தடுத்த விபத்து:2 மூதாட்டிகள் பலி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனா்.

Updated On :1 ஜனவரி 2021, 10:33 pm IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனா்.

ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் என்பவரின் மனைவி பழனியம்மாள் (65). இவா், ஆண்டிபட்டிக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளாா்.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து தேனி நோக்கிச் சென்ற நான்கு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநரான மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த கருப்பையா (27) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி அல்லிநகரம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா என்பவரின் மனைவி முருகேஸ்வரி (67). இவருக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். சிகிச்சை முடிந்த நிலையில், முருகேஸ்வரி வீட்டுக்குச் செல்வதற்காக மருத்துவமனை வளாகத்தின் வெளியே சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது, தூத்துக்குடியிலிருந்து தேனிக்கு சரக்கு ஏற்றி வந்த கனரக வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், முருகேஸ்வரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநரான தூத்துக்குடியைச் சோ்ந்த தங்கமாரிமுத்து என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.