தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி நகா் ரயில்வே பீடா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகப்பன் (62). விவசாயி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா் திங்கள்கிழமை வேலப்பா்கோவில் சாலையில் உள்ள தனியாா் அரிசி ஆலை அருகே பூச்சி மருந்தைக் குடித்ததால் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளாா். இதனைக் கண்ட அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகப்பன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


