மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

போடி அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை

போடி அருகே ஞாயிரன்று நள்ளிரவு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News image

ரவிக்குமார் (26).

Updated On :11 ஜனவரி 2021, 10:44 am IST

போடி அருகே ஞாயிரன்று நள்ளிரவு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் நேருஜி காலனியைச் சேர்ந்தவர் ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (26). டிப்ளமோ படித்துவிட்டு பெங்களூருவில் வேலை செய்து வந்தார். கரோனா கராணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

நள்ளிரவு வரை வராததால் இவரது தந்தை தேடிச் சென்றுள்ளார். அப்போது கீழச்சொக்கநாதபுரத்தையடுத்த சுந்தரராஜபுரத்திலிருந்து சில்லமரத்துப்பட்டி செல்லும் சாலையில் புளியமரத்தடி என்ற இடத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரவிக்குமார் இறந்து கிடந்துள்ளார். 

பின் தலை, வலதுபுற தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டியுள்ளனர். இடது ஆள்காட்டி விரலும் துண்டாக கிடந்துள்ளது. இதுகுறித்து ஒண்டிவீரன் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

போடி டி.எஸ்.பி. ஜி.பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.