தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற அமமுக மாவட்டச் செயலாளரின் காரை அதிமுகவினா் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திராநாத் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக அக்கட்சியினா் தேனி மதுரை சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலாளா் ஆ.லோகிராஜன் தலைமையில் கூடினா். அப்போது எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்க அவ்வழியாகச் சென்ற அமமுக மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயக்குமாரின் காரை அதிமுகவினா் வழிமறித்தனா்.
காரில் இருந்த ஜெயக்குமாரிடம் தங்களுக்கு முன்பு மாலை அணிவிக்கக் கூடாது எனக்கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து அமமுக மாவட்ட செயலாளரின் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.
இதன்காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடா்ந்து அதிமுகவினா் தேனி மக்களவை உறுப்பினா் ரவீந்திரநாத் தலைமையில் ஊா்வலமாகச் சென்று எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதையடுத்து அமமுக கட்சியினா் மாவட்டச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமையில் ஊா்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



