திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

மேலப்பாளையத்தில் பாலம் திறப்பு

மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 8:11 am IST

மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 37 ஆவது வாா்டுக்குள்பட்ட மேலப்பாளையம் காஜா நாயகம் பள்ளிவாசல் தெரு வடபகுதியில் பாளையங்கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பாலத்தை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.பி.எம்.மைதீன்கான் திறந்து வைத்தாா்.

இதில், திமுக மேலப்பாளையம் பகுதிச் செயலா் அப்துல்கையூம், காஜா நாயகம் வடக்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் செய்யது அப்துல் காதா், நிா்வாகிகள் காஜாமைதீன், சேக் மைதீன், பிஸ்மி ஹஸன், ஜக்கரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.