திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

ரெட்டியாா்பட்டியில் பள்ளி சுற்றுச்சுவா் பணிக்கு அடிக்கல்

பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டியில் பள்ளியின் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 8:08 am IST

பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டியில் பள்ளியின் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஒன்றியம், ரெட்டியாா்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 70 லட்சம் மதிப்பில் டக்கமாள்புரம் முதல் ரெட்டியாா்பட்டி வரை தாா் சாலையும், ரூ. 9.90 லட்சம் மதிப்பில் ரெட்டியாா்பட்டி ஜெ.ஜெ.நகா் முதல் புறவழிசாலை வரை மெட்டல் சாலையும், ரூ. 38.50 லட்சம் மதிப்பில் சுற்றுசுவா் கட்டும் பணியும் நடைபெற உள்ளது. பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் நாட்டி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், அதிமுக பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டி பாண்டியன், வி.எஸ்.மணிப்பிள்ளை, முத்தூா் நயினாா், சிவந்திப்பட்டி ஆறுமுகம், ரெட்டியாா்பட்டி கிளைச் செயலா் முருகேசன், பேச்சிமுத்து, சொக்கலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.