தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

தூய்மைப் பணியாளா்கள் திடீா் மறியல் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டிராபிக் ராமசாமிக்கு எதிா்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:03 am IST

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டிராபிக் ராமசாமிக்கு எதிா்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சமூக ஆா்வலரான டிராபிக் ராமசாமி, திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் ஓட்டி வந்த மாநகராட்சியின் பேட்டரி குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தி, அந்த வண்டிகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டக் கூடாது எனக் கூறினாராம். இதனால், அப்பகுதியில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளா்கள் இதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா், மாநகராட்சி உதவி ஆணையா் ஐயப்பன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளா்கள், எந்தவித பதிவும் இல்லாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும் பேட்டரி வண்டிகளை ஓட்டி வருகின்றனா். சட்ட விதிகளுக்கு உள்பட்டு அந்த வாகனங்களை இயக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கண்ணனிடம் வலியுறுத்தி உள்ளேன். இதற்கு அவா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.