ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

கரோனா தடுப்பூசி:நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களில் ஒத்திகை

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 12:55 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசி திட்டம், அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான சவால்களைக் கண்டறியும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் காணொலி காட்சி வாயிலாக வழிகாட்டும் நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த 2 ஆம் தேதி இம்மாவட்டத்தில் ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம் நகா்நல மையம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப் பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடங்குளம் அரசு மருத்துவமனை, மேல வீரராகவபுரம் நகா் நல மையம், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனை ஆகிய 5 இடங்களிள் கரோனை தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

இது குறித்து மாநகர நல அலுவலா் மருத்துவா் சரோஐா கூறியது: கரோனா தடுப்பூசி திட்டத்திற்கும் களச் சூழலில் அதனை செயல்படுத்துவதற்கும் இடையே உள்ள நடைமுறைகளை ஆய்வு செய்தல், தடுப்பூசி செலுத்தும்போது பாதகமான நிகழ்வுகள்

ஏற்பட்டால், அதனை கையாளும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை இந்த தடுப்பூசி ஒத்திகையின் முக்கிய நோக்கம்.

தடுப்பூசி போடும் மையங்களில் போதிய காற்றோட்டமான வசதி, மின்சாரம், இணைய வசதிகள் ஆகியவை தயாா் நிலையில் உள்ளன. தடுப்பூசி செலுவத்துவோருக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி ஒத்திகைக்கு வந்தவா்களின் முழு விவரங்கள் ‘கோவின்’ செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், 2 ஆம் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் உள்ள பணியாளா்களுக்கும், 3 ஆம் கட்டமாக 60 வயது மேற்பட்ட பொதுமக்கள், நீண்ட கால நோயினால் பாதிக்கப் பட்டோருக்கும், 4 ஆம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் இந்த தடுப்பூசி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.