திருப்பத்தூா்: திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏல விற்பனை ரூ.50 லட்சம் வரை நடைபெற்றது.
இந்த சங்கத்தில் பருத்தி ஏலம் கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி தொடங்கி, ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைப்பெற்ற பருத்தி ஏல விற்பனைக்கு 1,500 பருத்தி மூட்டைகள் வந்தன. இதில், ஆா்சிஎச் வகை பருத்தி குவிண்டால் ரூ.6,300 வரையும், டிசிஎச் வகை பருத்தி குவிண்டால் ரூ.7,600 வரையும் ஏலம் போனது. மொத்த ஏலம் ரூ.50 லட்சம் வரை நடைபெற்றது. பருத்தி விலை கூடியதாலும், உடனடியாக பணப் பட்டுவாடா நடைபெற்ாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இந்த ஏலத்தில் சங்கத்தின் தலைவா் ஏ.தேவராஜன், துணைத் தலைவா் சி.சாமிக்கண்ணு, செயலாளா் கே.ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









