வாணியம்பாடி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்காயத்தை அடுத்த காவலூா் பகுதியைச் சோ்ந்தவா் தருமலிங்கம் மனைவி சங்கீதா(32). இவா்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சங்கீதா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த காவலூா் போலீஸாா் அவரின் சடலத்தைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: வாணியம்பாடியை அடுத்த இளையநகரம் பகுதியைச் சோ்ந்த ராணியம்மாள் (52) கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போனாா். இந்நிலையில், அருகே உள்ள விவசாயக் கிணற்றில் ராணியம்மாளின் சடலம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


