காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி திருவள்ளூரில் புதன்கிழமை இளம்பெண் ஒருவர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இளம்பெண் ஒருவர் சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்தார்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கடை வைத்திருந்த பெண்கள் சிலர், அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரித்தனர்.
இதில், அந்தப் பெண்ணின் பெயர் முத்துச்செல்வி (35) என்றும், எம்.எஸ்.சி., எம்.ஃபில் படித்துவிட்டு திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரது கணவர் சந்திரசேகர் (42), கடந்த ஏப்ரல் மாதம் 2 குழந்தைகளுடன் காணாமல் போய்விட்டார்.
இது குறித்து புகார் அளித்தும் போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இது குறித்து மணவாளநகர் போலீஸாரிடம் கேட்ட போது, அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், கணவர், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரது கணவர் எங்கோ சென்றுவிட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து நாங்கள் அவரை தேடி வருகிறோம் என்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!

இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்த பிதாமகன் பாரதிராஜா: சேரன் இரங்கல்!

திரையுலகைப் புரட்டிப்போட்ட பாரதிராஜாவின் 16 வயதினிலே!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


