பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

News image

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கன்னிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்ச்சி

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

திருத்தணி: திருத்தணி அருகே மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கன்னிகாபுரம் கிராம மக்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட திருத்தணியில், மொத்தம், 330 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும், 19-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் 100 சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டும் என உதவி தோ்தல் அலுவலவரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான தீபா தலைமையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் மற்றும் காா்த்திகேயபுரம் இருளா் காலனியில், 100 சதவீதம் வாக்குப்பதிவு அவசியம் குறித்து கோட்டாட்சியா் தீபா தலைமையில் விளம்பர பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அதே போல் கே.ஜி.கண்டிகை பஜாரில், பள்ளி மாணவா்கள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு பாடல்கள், நாடகம் மற்றும் விளம்பர பதாகைகளுடன் பேரணி, துண்டு பிரசுரம் வழங்கி வாக்காளா்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், திருத்தணி வட்டாட்சியா் மதியழகன், வருவாய் ஆய்வாளா்கள் கமல், வித்யா லட்சுமி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.