திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில அமைச்சா்கள் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி, ஆா்.கே. ரோஜா தரிசனம் செய்தனா்.
கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மூலவருக்கு தங்கக் கவசம் தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு உற்சவா் காவடி மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு, அவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.
விழாவில் ஆந்திர மாநில சுரங்கம், மின்சாரம் மற்றும் வனத் துறை அமைச்சா் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி, சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சா் ஆா்.கே.ரோஜா ஆகியோா் முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா்கள் ஜி.உஷாரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்!

கோளப்பாறை: ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

