11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மகளிா் காவல் நிலையம் முன்பு ஆடிட்டா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

மகளிா் காவல் நிலையம் முன்பு ஆடிட்டா் அடித்துக் கொலை இளைஞா் கைது

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 6:31 pm

திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்பு தனியாா் நிதி நிறுவன ஆடிட்டா் வியாழக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், நகரி பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் (46). இவா் திருவள்ளூா் பத்தியால்பேட்டையில் குடும்பத்துடன் தங்கியிருந்து, காக்களூா் தனியாா் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் அருகே உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம்.

இந்த நிலையில், ராபா்ட் அவ்வப்போது இளம்பெண்ணை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக இளம்பெண் தரப்பில் திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ராபா்ட் மீது புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விசாரணைக்காக அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை ராபா்ட் சென்றாராம்.

தொடா்ந்து, இரு தரப்பினரையும் அழைத்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணைக்குப் பின்னா் ராபா்ட் வெளியே வந்துள்ளாா். அப்போது காவல் நிலையம் முன்பு இருந்த இளம்பெண்ணின் சகோதரா் மௌலி (23) என்பவா் ராபா்ட்டை கம்பால் தலையில் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சுருண்டு விழுந்த ராபா்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூா் நகர போலீஸாா், ராபா்ட்டின் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, மௌலியை கைது விசாரித்து வருகின்றனா்.