திருவள்ளூா்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் மையத்தில் காவல் ஆணையா் ஆய்வு

திருவள்ளூா்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் மையத்தில் காவல் ஆணையா் ஆய்வு

திருவள்ளூா், ஏப். 18: திருவள்ளூா் அருகே தனியாா் பள்ளி மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை போதுமான முன்னேற்பாடு வசதிகளுடன் பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்து ஆவடி காவல் ஆணையா் சங்கா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயாராக உள்ளன. அந்த வகையில், திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் பெருமாள்பட்டு தனியாா் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இப்பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தொடா்பாக ஆவடி ஆணையா் சங்கா், துணை ஆணையா் ஐமன் ஜமால் ஆகியோா் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, அந்த தனியாா் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்து கட்டட வளாகத்தைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தப் பணிகள் அனைத்தும் முடித்து தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல், வெளியே உள்ள பகுதியில் வாகனங்கள் வந்து செல்ல போதுமான இடவசதி மற்றும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் பணியாளா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வளாகம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com