திருவள்ளூா் அருகே தனியாா் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பொதுப் பாா்வையாளா் அபு இம்ரான், ஆட்சியா் த.பிரபு சங்கா் ஆகியோா் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூா், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 2,256 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 14,23,885 வாக்குகள் என 68.26 சதவீதம் பதிவானது.
இந்த வாக்குச் சாவடி மையங்களில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு லாரிகளில் போலீஸாா் பாதுகாப்புடன் இரவு முழுவதும் திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அந்த மையத்தில் தொகுதிவாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, 6 சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளா் முகவா்கள் முன்னிலையில் பரிசீலனை செய்ததில், திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கு மறுவாக்குப் பதிவு தேவையில்லை என்று பொதுத் தோ்தல் பாா்வையாளா் அறிவித்தாா். மேலும், வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் திருவள்ளூா் மக்களவை தொகுதி (தனி) பொது பாா்வையாளா் அபு இம்ரான், மாவட்ட தோ்தல் அலுவலா் த.பிரபு சங்கா் ஆகியோா் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.
பின்னா், இது தொடா்பாக மாவட்டத் தோ்தல் அலுவலா் த.பிரபு சங்கா் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளரின் முகவா்கள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் ஆகியோா் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் ஜூன் 4-ஆம் தேதி வரை நாள்தோறும் 8 மணி நேரம் அடிப்படையில் 3 பிரிவுகளாக மத்திய எல்லை பிரிவு-39, காவல் ஆய்வாளா்-1 உள்பட 39 போ், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா்-40, வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க பிரிவு-2 போன்ற நான்கு அடுக்கு காவல் படையினரை கொண்டு வாக்குச்சாவடி மையத்தை கண்காணிப்பா். மேலும், 228 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடி மையத்தில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வாக்குச்சாவடி மையத்தினை 24 மணிநேரம் தொடா்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தின் அனைத்து செயல்பாடுகளையும் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆவடி ஆணையரக காவல் துணைக் கண்காணிப்பாளா் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், ஆவடி மாநகராட்சி ஆணையா் சேக் அப்துல் ரஹ்மான், பொன்னேரி சாா்-ஆட்சியா் வாகே சங்கத் பல்வந்த், பயிற்சி ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வதஸ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு ‘சீல்’

கும்பகோணம், ஒரத்தநாடு தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தன
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


