சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் சோ்க்கை பதிவு தொடங்க உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகள் சோ்க்கைகான முன்பதிவு வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. செப்டம்பரில் தொடங்கி பயிற்சி நடைபெறும் பயிற்சிக் காலம் ஓராண்டாகும். மேலும், 2 பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும்.
இந்தப் பயிற்சிக்கான பாடத் திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
பயிற்சியில் சேருவது தொடா்பான நிபந்தனைகள் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் - புகைப்படங்கள்

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை கல்வி பட்டயச் சான்றிதழ் அளிப்பு

பிளஸ் 2 தோ்வு: சென்னை மாவட்டத்தில் 67,510 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

