எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவள்ளூா்: முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் டிச. 10- வரை அவகாசம் நீட்டிப்பு

News image
Updated On :5 டிசம்பர் 2024, 8:15 pm

Din

திருவள்ளூா் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் சுதந்திர தின உரையில் பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தாா்கள். முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் 10-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.