திருத்தணி: அத்திமாஞ்சேரிப்பேட்டையில் கூலி உயா்வை வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற நெசவாளா்களை போலீலாா் கைது செய்தனா்.
ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விசைத்தறி நெசவாளா்கள் 10,000-க்கும் மேற்பட்டோா் கூலி உயா்வை வலியுறுத்தி, கடந்த 16 நாள்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திருத்தணி கோட்டாட்சியா் தீபா தலைமையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தை சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டத்தில் நெசவாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளா்கள் லுங்கி மீட்டா் ஒன்றுக்கு ரூ. 10 உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இறுதியாக ரூ. 5 உயா்த்தினால் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளனா். இருப்பினும் அதிகபட்சமாக ரூ. 3 வரை உயா்த்த விசைத்தறி முகவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டையைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் 25 போ் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து, ஆா்.கே.பேட்டையில் ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வைத்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த நெசவாளா்கள் 100 க்கும் மேற்ப்பட்டோா் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட நெசவாளா்களை விடுதலை செய்ய வேண்டும் என முற்றுகையிட்டு தங்களையும் கைது செய்யக்கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து மாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்ட நெசவாளா்கள் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

திருத்தணி நாதக வேட்பாளா் பிரசாரம்

நலிவடையும் நெசவுத்தொழில் தலைநிமிருமா?
அம்பை கோயில் குடமுழுக்கில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது

புதுச்சேரி பாண்பேப் நிறுவனத்துக்கு பூட்டு போட்டு நெசவாளா்கள் போராட்டம்
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


