மாதவரம் தொகுதியில் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட பாண்டேஸ்வரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 62 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியா் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய திமுக செயலாளா் கோ.தயாளன், பாண்டேஸ்வரன் ஊராட்சி மன்றத் தலைவா் ரேகா ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெற்றோா் - ஆசிரியா் சங்க தலைவா் சுரேஷ் வரவேற்றாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலருமான எஸ்.சுதா்சனம் பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினாா். இதில் மாவட்ட திமுக துணைச் செயலா் கரலப்பாக்கம் ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் குணாதயாநிதி, ஒன்றியத் துணை செயலா் ராமதாஸ், வெள்ளானூா் ஊராட்சித் தலைவா் மதுரைமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஸ்டெம், விண்வெளி துறைகளில் பயிற்சி முகாம்: அமெரிக்க மையம் நடத்துகிறது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

நீப்பத்துறை அரசுப் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

