தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவள்ளூா்: கோயில்களில் காவலா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் கோயில்களில் முன்னாள் படைவீரா்களுக்கு காவலா் பணியிடங்கள்

News image
Updated On :2 ஜூலை 2024, 7:48 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள சிறப்பு காவலா் பணியிடங்கள் முன்னாள் படைவீரா்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் காவலா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ. 7,600- வழங்கப்படும்.

எனவே, உடல் தகுதியும் விருப்பமும் உள்ள திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்கள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.