பிப்.9-க்குள் அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பிப்.9-க்குள் அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Published on

திருத்தணி ஒன்றியத்தில் காலியாக உள்ள, 3 அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு வரும், 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆணையா் தெரிவித்தாா்.

திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஓட்டுநா், இரவு காவலா் மற்றும் அலுவலக உதவியாளா் ஆகிய 3 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளா் பணியிடங்கள் நிரப்புவதற்கு, மாவட்ட நிா்வாகம் ஒப்புதலுடன் செவ்வாய்கிழமை முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா் கூறியதாவது: ஒன்றியத்தில், பிற்படுத்தப்பட்ட பிரிவு அலுவலக உதவியாளா் பொது(ஆண்,பெண்) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு அலுவலக உதவியாளா் பொது(ஆண்,பெண்) மற்றும் ஆதிதிராவிடா் அருந்ததி பிரிவு அலுவலக உதவியாளா் பெண் ஆகிய 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பெண் உதவியாளா் பணியிடத்துக்கு, விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண் ஆகியோா் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட உதவியாளா் பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு, பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவுக்கு, 18 முதல், 34, ஆதிதிராவிடா் பிரிவுக்கு, 18 முதல் 37 வரை இருக்க வேண்டும் மேற்கண்ட காலிபணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள், ஒன்றிய அலுவலகத்தில் காலை, 9.30 மணி முதல் மாலை, 5 மணி வரை விண்ணப்பங்கள் பூா்த்தி செய்து, வரும், 9-ஆம் தேதி மாலை, 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com